'டீ குடிக்க போனேன்...' 'அசால்ட்டா கூறிய கொரோனா நோயாளி...' 'என் நண்பனுக்கும் கொரோனா, அதான்...'அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 07, 2020 01:18 PM

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர், பக்கத்து வார்டில் நண்பரை பார்க்க சென்றுள்ளதாகவும் , அவரை பார்க்க முடியாததால் டீ குடிக்க போனதாக கூறிய சம்பவம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The old man was affected by the corona has gone out to drink tea

கடந்த மாதம் 29-ம் தேதி பள்ளிக்கரணையைச் சேர்ந்த 62 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தீடீரென முதியவர் மாயமாகியுள்ளார்.

மருத்துவமனைக்கு முழுவதும் தேடி பார்த்தும் முதியவர் கிடைக்கவில்லை. இதனால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

போலீசாரும் சுகாதார துறையும் சேர்ந்து இரவு முழுவதும் தேடியும் முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து இன்று அதிகாலை முதியவர் தானாக மருத்துவமனை கொரோனா வார்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.

முதியவரை பார்த்து அதிர்ந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அம்முதியவரிடம் எங்கு போனீர்கள் என்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய பதில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

'டீ குடிக்கணும் போல இருந்துச்சு, அதான் டீ கடைக்கு போனேன் இங்க டீ கடை ஒண்ணுமே இல்லை. என் நண்பன் ஒருவர் இதே ஹாஸ்பத்திரில கொரோனா வார்டுல சேர்த்துருக்காங்கணு தெரியவந்துச்சு அதான் அவனையும் பாக்கலாம் போனேன் என்னால பாக்க முடில சரி இங்கயே வந்துட்டேன்' என தனது அதிரடி பதிலை தந்துள்ளார் அந்த முதியவர்.

கொரோனா வைரஸ் ஒரு உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த இக்கட்டான சூழலில் எவ்வித பயமும், முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் இன்றி முதியவர் செய்த இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது

Tags : #TEA #CORONA