"கொரோனா இருக்கானு தெரிஞ்சுக்கணும்னா... இந்த 'டெஸ்ட்' கண்டிப்பா பண்ணணும்"... மூக்கில் இருந்து சாம்பிள் எடுப்பது போல் இளம்பெண்ணின் அந்த... - 'படுபாதக' செயலில் ஈடுபட்ட 'லேப் டெக்னீசியன்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் 24 வயது பெண்மணி ஒருவர் தனக்கு கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டி அருகிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.

முன்னதாக, அந்த பெண்ணுடன் பணிபுரிந்த மற்றொரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார். பொதுவாக, ஒருவரின் மூக்கு அல்லது வாயில் இருந்து சளி மாதிரிகளை எடுத்து கொரோனா இருக்கிறதா என பரிசோதனை மேற்கொள்ளும் நிலையில், அங்கிருந்த லேப் டெக்னீசியன், அந்த பெண்ணிடம் உங்களின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும். அது மிக முக்கியமானது ஆகும் எனக்கூறி அந்த பெண்மணியை நம்ப வைத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிந்து வீட்டிற்குச் சென்ற அந்த பெண், தனக்கு நடந்த பரிசோதனை குறித்து தனது சகோதரருடன் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணின் சகோதரர், சில மருத்துவர்களிடம் விசாரித்த போது, இப்படி ஒரு பரிசோதனை முறை இல்லை என தெரிவித்ததில் அந்த பெண்ணும் சகோதரரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.
தொடர்ந்து, இதுகுறித்து அவர்கள் புகாரளித்த நிலையில், அந்த டெக்னீசியன் மீது கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
