'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா?' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன?'
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் பரவி வரும் கொராணோ வைரஸ் தொற்று தற்போது அதிக வீரியம் கொண்ட ‘கிளேட் A13I’ வைரஸாக உருமாறி பரவி வருவதாகவும், மகாராஷ்டிராவிலிருந்து தற்போது இந்த வைரஸ் தமிழகத்தில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 41 சதவீதம் பேர் உயிரிழந்து விடுவதாகவும், ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த வைரஸ் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் செய்திகள் உலா வருகின்றன.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளார். “கோவிட்-19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட ‘கிளேட் A13I' ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ‘கிளேட் A13I’ வைரஸ் தற்போது தமிழகத்தில் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் வருகிற செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில், இதுவரை மூன்று விதமான தன்மை கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவை சீனாவின் வுகான் மாகாணம், இத்தாலி, ஈரான் நாட்டை சேர்ந்தவை. அவற்றில் சீனாவின் வைரஸும், ஈரானின் வைரஸும் ஒரே மரபனு தொடரை கொண்டவை. எனவே, கொரோனா வைரஸ் ஒருவேளை உருமாறியிருந்தால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.