மேக்கப் போட வந்தவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா...! 'பியூட்டி பார்லர் வரும் பெண்கள் தான் மெயின் டார்கெட்...' - நூதன மோசடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் செயல்பட்டுவரும் முக்கிய பிட்னஸ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு தொடர்ச்சியாக வரும் பெண்களை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டியுள்ளார் சத்யா என்ற பெண்மணி.
சேலம் ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் அழகு நிலையங்களுக்கு வரும் பெண்களிடம் நட்பாக பேசி தன்னை ஒரு பைனான்சியராகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு உறவு பாராட்டி வந்துள்ளார் வேலூர் மாவட்டம் பள்ளேரி பகுதியை சேர்ந்த டைட் மேக்கப் சத்யா.
வங்கிகளில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 600 முதல் 700 ரூபாய் தான் வட்டியாக கிடைக்கும். ஆனால் தன்னுடைய பைனான்ஸில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் 5 நாளைக்கு ஒரு முறை 3 ஆயிரம் வட்டிவரும் 2000 பணம் செலுத்தியவருக்கும் 1000 தனக்கு எனவும் பங்கு பிரித்துக்கொள்ளலாம் எனவும், அதுமட்டுமில்லாமல் 5 சவரன் நகை கொடுத்தால் பத்து நாட்களில் நகையைத் திருப்பிக் கொடுக்கும்போது 5 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் அதில் 3 ஆயிரம் உங்களுக்கு 2000 கம்பெனிக்கு என்றும் பெண்களிடம் ஆசைக் காட்டி தன் வலைக்குள் விழ வைத்துள்ளார்.
சத்யாவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுக்கு தெரியாமல் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையில் அள்ளிக்கொடுத்துள்ளனர். சிலர் 25 சவரன் வரை நகைகளையும் கொடுத்துள்ளனர்.
அதையடுத்து சில மாதங்கள் தொடர்பில் இருந்த சத்யா திடீரென காணாமல் தலைமறைவாகியுள்ளார். மேலும் அவரிடம் பேசியவர்களிடம் கம்பெனியில் பணம் எல்லாம் காலியாகிவிட்டது, என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்றும், தனக்குப் பின்னால் முக்கிய புள்ளிகள் இருப்பதாக மிரட்டியும் உள்ளார்.
பணத்தை பறிகொடுத்த பெண்களில் 5 பேர் மட்டும் இணைந்து சத்யா மீது ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதில் சத்யா, தங்களிடத்தில் 60 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், 25 சவரன் தங்க நகையும் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சத்யாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மேலும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி,சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.