8 ஆண்களுடன் திருமணம்.. கடைசி கணவனுடன் காரில் போகும்போது, திடீரென.. மன அழுத்தத்தில் கணவர்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் ஆண்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட பெண் மீது அதிகளவில் எழுந்த புகாரால் காவல்துறையே திக்குமுக்காடி உள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் ஒருவர் வசதியான பணக்கார ஆண்களை குறி வைத்து ஆசை வார்த்தையில் பேசி ஆப்பு வைத்துள்ளார். இவர் ஊர்மிளா என்ற பெயரில் மட்டுமல்லாமல் ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரிலும் அதிகப்படியான ஆண்களை மயக்கியுள்ளார்.
திருமணத்திற்கு பின் இருந்த மெகா திட்டம்:
காதல் வார்த்தைகள் பேசும் ஊர்மிளா அவர்களை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்தியபின், சில நாட்கள் கழித்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதையே தன் தொழிலாக கொண்டுள்ளார்.
ஒரே பெயரில் வந்த பல புகார்கள்:
இவர் குறிப்பாக ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களில் இருக்கும் ஆண்களிடம் தன் கைவரிசையை காட்டியுள்ளார். இந்நிலையில் அந்தந்த பகுதி காவல்துறையினருக்கு சிலர் ஒரே பெயர் மீது புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகார்களை கவனித்த காவல்துறை அதிகாரிகள் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
காரில் வைத்து போட்ட பிளான்:
இந்த நிலையில் ஊர்மிளா மீண்டும் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்பவரை 8-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது தன் கணவருடன் காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்ட ஊர்மிளா ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கீழே இறங்கியுள்ளார்.
வழக்கம் போல் திட்டத்தை நிறைவேற்றிய மோசடி பெண்:
அதன்பின் ஊர்மிளா ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்து தஷ்ரத் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மேலும், ஊர்மிளாவின் கள்ள கல்யாணத்திற்கு உதவியாக இருந்த அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
