உயிரிழந்த குரங்கிற்காக ஒன்றுகூடிய கிராம மக்கள் - கண்ணீருடன் இறுதி மரியாதை செய்யும் நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 11, 2022 05:42 PM

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கிறது தாளுபுரா கிராமம். இங்கு குரங்கு ஒன்று பொது இடங்களில் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் அந்தக் குரங்கு உயிரிழக்கவே, மொத்த கிராம மக்களும் திரண்டு அக்குரங்கிற்காக இறுதி ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Village Peoples Gathered for Monkey Funeral - viral vi

மொட்டை அடித்துக்கொண்ட இளைஞர்

குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடந்த நிலையில் தாளுபுரா கிராமவாசியான ஹரி சிங் இந்து மத மரபுகளின்படி குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டார். கிராம மக்களுடன் எப்போதும் பாசமாக பழகிவந்த இந்த குரங்கின் மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Village Peoples Gathered for Monkey Funeral - viral vi

1500 பேருக்கு விருந்து

குரங்கு உயிரிழந்ததை அடுத்து கிராம மக்கள் வசூல் செய்து மிகப்பெரிய விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் 1500 பேர் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. மேலும், தங்களது பாசத்திற்குரிய குரங்கு உயிரிழந்துவிட்டதாகவும் அதற்க்காக நடத்தப்படும் விருந்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கிராம மக்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.

5 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - கடைசி நேரத்தில் போட்டியை ஒத்திவைத்த வெஸ்ட் இண்டீஸ்..!

 

Village Peoples Gathered for Monkey Funeral - viral vi

இதுகுறித்து வெளியான வீடியோவில், பிரம்மாண்டமாக போடப்பட்ட பந்தலில் மக்கள் அமர்ந்து உணவு உட்கொள்ளும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

ஒன்றுகூடத் தடை

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று  வேகமாக பரவிவரும் வேளையில், மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரங்கின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் பங்கேற்றது தொடர்பாக 2 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் - மதுரை கலெக்டர் அறிவிப்பு..!

 

Village Peoples Gathered for Monkey Funeral - viral vi

மத்திய பிரதேசத்தில் நேற்று மட்டும் 2,317 புதிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 2,039 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை ஒரே நாளில் 300 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #MADHYA PRADESH #VILLAGE PEOPLE #MONKEY FUNERAL #மத்திய பிரதேச மாநிலம் #குரங்கு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Village Peoples Gathered for Monkey Funeral - viral vi | India News.