‘எப்போவாவதுன்னா பரவாயில்ல… இவருக்கு எப்பயுமே அதிர்ஷ்ட சூறாவளிதான் போல’- கோடிக்கணக்கில் சம்பாதித்த அமெரிக்கர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் சஃபோக் பகுதியைச் சேந்ர்தவர் ஆல்வின் கோப்லேண்ட். இவர் கடந்த 2002-ம் ஆண்டு விர்ஜினியா லாட்டரியில் இருந்து பரிசுக்கூப்பன் ஒன்றை வாங்கி உள்ளார்.

அந்தப் பரிசுக் கூப்பனின் வரிசை எண்களை சரியாகக் கணக்கிட்டு சொல்லி 1 லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசாக வென்றுள்ளார். அதன் பின்னர் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே விர்ஜினியா லாட்டரியில் இருந்து ஒரு டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரியான எண் வரிசையைச் சொல்லி வெற்றி பெற்றுள்ளார் ஆல்வின்.
ஆனால், இந்த முறை அவருக்கு விழுந்த பரிசுத் தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.6 கோடி ரூபாய் ஆகும். விர்ஜினியா லாட்டரியில் இதுவரையில் இப்படித் தொடர்ச்சியாக வென்றவர்கள் ஒன்று, இரண்டு பேர்கள் அல்ல. பலருக்கும் இன்னும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
ஸ்காட்டி தாமஸ் என்பவர் இதே போல் விர்ஜினியா லாட்டரியில் ஒரே மாதிரியான 2 லாட்டரிச் சீட்டுகளை வாங்கியுள்ளார். அதில் இரண்டு சீட்டுக்குமே அதிர்ஷ்டம் அடிக்க 49 வயதான ஸ்காட்டி, 7,80,000 அமெரிக்க டாலர்களை பரிசாகப் பெற்றுச் சென்றார்.
கடந்த அக்டோபர் மாதம் கூட வில்லியம் நேவல் என்ற நபர் ஒரே மாதிரியாக 20 லாட்டரிச் சீட்டுகளை வாங்கி 20 சீட்டுகளிலும் பரிசுத் தொகையை வென்றார். இதற்காக இவர் வென்ற பரிசுத் தொகையின் மொத்த மதிப்பு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 74 லட்சம் ரூபாய் ஆகும்.

மற்ற செய்திகள்
