முதலமைச்சர் அப்பாவை விட 5 மடங்கு செல்வச் செழிப்பான மகன்..!- வெளியிடப்பட்ட சொத்து விவரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Rahini Aathma Vendi M | Jan 03, 2022 08:18 PM

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை விட அவரது மகன் 5 மடங்கு பணக்காரர் ஆக செல்வச செழிப்புடன் இருக்கிறார்.

chief minister nitish kumar son is 5 times wealthier than father

பிஹார் முதலமைச்சராக இருப்பவர் நிதிஷ் குமார். இவரது சொத்து மதிப்பை விட இவரது மகன் நிஷாந்த் இடம் 5 மடங்கு அதிகப்படியான சொத்துகள் இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் சட்டமன்றத்தில், அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை ஆண்டு தோறும் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது விதி ஆகும்.

chief minister nitish kumar son is 5 times wealthier than father

அதன் அடிப்படையில் முதல்வர் நிதிஷ் குமார் உடன் அத்தனை அமைச்சர்கள், சட்டமன்ற உறிப்பினர்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான அத்தனை சொத்து விவரங்கள், கையிருப்பு பணம், சேமிப்பு என அனைத்துத் தகவல்களும் பிஹார் அரசு இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

chief minister nitish kumar son is 5 times wealthier than father

அரசு இணையதளத்தில் வெளியானதன் அடிப்படையில் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக 29,385 ரூபாயும், வங்கிக் கணக்கில் 42,763 ரூபாயும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மகன் நிஷாந்திடம் ரொக்கமாக 16,000 ரூபாயும், வங்கிக் கணக்கில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

chief minister nitish kumar son is 5 times wealthier than father

நிதிஷ் குமாரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 75 லட்சம் ரூபாய். மேலும், புது டெல்லியில் உள்ள துவாரகாவில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு குடியிருப்பு, 1.45 லட்சம் மதிப்புள்ள 13 பசுக்களும், 9 கன்றுகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதே வேளையில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்தின் சொத்து மதிப்பு 3 கோடியே 60 லட்சமாக உள்ளது.

இதுபோக, நிஷாந்துக்குச் சொந்தமாக கல்யாண் பிகா, ஹக்கிகத்பூர் மற்றும் பாட்னாவில் உள்ள கன்கர்பாக் ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. ஆக, தனது முதலமைச்சர் தந்தை நிதிஷ்குமாரை விட அவரது மகன் 5 மடங்கு பணக்காரர் ஆக உள்ளார். நிதிஷ் குமாரின் மகன் மட்டுமல்லாது அவரது அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்களும் அவரை விட பணக்காரர்களாகவே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : #MONEY #NITISH KUMAR SON #CHIEF MINISTER NITISH KUMAR #CM WEALTHIEST SON #நிதிஷ் குமார் #முதலமைச்சர் மகன் #முதலமைச்சர் சொத்து மதிப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chief minister nitish kumar son is 5 times wealthier than father | India News.