புதுசா 'கல்யாணம்' ஆனவங்க... கார்ல வந்தப்போ ஆத்து 'தண்ணி'ல மூழ்கிடுச்சு... அடுத்தடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம் பாலாமு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் உட்பட மூன்று பேர் சென்ற கார் ஒன்று ஆற்றுக்குள் விழுந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டுள்ளனர்.

ஆற்றுக்குள் கார் ஒன்று மூழ்கிக் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காரில் சிக்கி இருப்பவர்களை மீட்க தண்ணீருக்குள் குதித்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர், காரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருமணம் முடிந்து மணமகனின் கிராமத்திற்கு திரும்பிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆற்றுப் பாலம் ஒன்றில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்த போது அந்த பாலத்தில் இருந்து ஆற்று நீரில் விழுந்து பின் அடித்து செல்லப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் அந்த காரின் ஜன்னல்களை உடைத்து, அதில் இருந்த புதுமண தம்பதிகளை காப்பாற்றுவதற்கு முன் கார் ஆற்றில் சுமார் அரை கிலோமீட்டர் வரை அடித்து சென்றுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி மற்றும் இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
