'இனிமேல் என்ன இருக்கு'... 'அண்டர்டேகர் எடுத்த உருக்கமான முடிவு'... 'என்ன தல இது'... நொறுங்கிப்போன 90ஸ் கிட்ஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 22, 2020 03:50 PM

90ஸ் கிட்ஸ் எனப்படும் 90களில் பிறந்தவர்களுக்கு கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை ஒன்று இருந்தது. அது உண்மையா என்று கூட மறு கேள்வி கேட்காமல் அதை அவர்கள் நம்பிக் கொண்டு இருந்தார்கள். அது தான் 'அண்டர்டேகர்' இறந்தும் உயிர் பெற்று வந்தார் என்பது.

The Undertaker has announced his retirement from WWE

ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் முடிசூடா மன்னனாகவும், மிகப்பெரிய சகாப்தமாகவும் திகழ்ந்தவர் தான் அண்டர்டேகர். கடந்த 30 வருடங்களாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்து வைத்துள்ள அவர் குறித்து, 'அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட்' என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது அண்டர்டேகரின் மொத்த வாழ்க்கையையும் கண்முன்பே கொண்டு வரும் ஆவணப்படம் ஆகும்.

இதன் கடைசிப் பகுதியில், தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அண்டர்டேகர் குறிப்பிட்டுள்ளார். அண்டர்டேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது, அவரது ரசிகர்கள் பலருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், '' என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், மீண்டும் அந்த மேடையேறும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய பயணத்தை முடிக்கும் நேரம் இது. நான் சாதிக்க எதுவும் இல்லை. ஜெயிக்க எதுவுமில்லை. ஆட்டம் எல்லாம் மாறிவிட்டது. புதியவர்களுக்கு வழி விடும் நேரம் இது. அதைப் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் எனக்கு உதவி இருக்கிறது. வாழ்க்கையின் பெரிய பாகத்தைப் பார்க்க இது உதவியுள்ளது'' என உருக்கத்துடன் அண்டர்டேகர் பேசியுள்ளார்.

மார்க் காலவே என்பது தான் அண்டர்டேகரின் இயற்பெயர். 1990ம் ஆண்டு WWE என்று சொல்லப்படும் உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் அறிமுகமானார். கடைசியாக இவர் ரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடி, அதில் வெற்றியும் பெற்றார்.

ரெஸிமேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 90ஸ் கிட்ஸ்களின் ஆதர்சன நாயகனாக விளங்கிய அண்டர்டேகரின் ஓய்வு முடிவு எங்களுக்குப் பேரதிர்ச்சி எனப் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The Undertaker has announced his retirement from WWE | World News.