ஓடுறா..ஓடுறா பக்கத்துல வந்துடுச்சு.. BEACH ல நடந்த திருமணம்.. சுவரை தாண்டி பொங்கி எழுந்த கடல் அலை.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 18, 2022 08:12 PM

ஹவாய் தீவில் திருமண கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் பொங்கிய கடல் அலையை பார்த்ததும் திகைத்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

giant waves crash Hawaii island wedding caught on camera

Also Read | திடீர்னு கடல்ல உருவான புயல்.. தூக்கி வீசப்பட்ட படகுகள்.. ஷாக்-ஆகிப்போன மீனவர்கள்..!

உலகில் திருமணம் குறித்த பார்வை வெகுவாக மாறியுள்ளது. வாழ்வின் முக்கிய தருணமான திருமணத்தை தங்களுக்கு பிடித்த இடங்களில் நடத்த ஆசைப்படும் மக்கள், வித்தியாசமான இடங்களில் திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடற்கரையில் திருமணங்களை நடத்துவது சமீப ஆண்டுகளில் மிக பிரபலம் ஆகியுள்ளது. அலை ஓசைகளுக்கு மத்தியில், வெண் மணலில் தங்களுடைய இணையரின் கரங்களை கோர்க்க பலரும் விருப்பப்படுகின்றனர்.

திருமணம்

அப்படித்தான் நினைத்திருக்கிறார்கள் டிலான் மற்றும் ரிலே மர்பி தம்பதி. இவர்களுக்கு ஹவாயில் திருமணம் செய்துகொள்ள ஆசை. இதற்காக அமெரிக்காவில் இருந்து 2000 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவுக்கு தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். ஹவாயில் உள்ள மிகப்பெரிய தீவான கைலுவா-கோனாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களது திருமணத்தில் அழையா விருந்தாளியாக கடல் அலை ஆக்ரோஷமாக நுழையவே அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைத்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த திருமண விழாவில், புல் தரையில் அமைக்கப்பட்டிருந்த தரையில் சேர்கள் அமைக்கப்பட்டு அதில் தம்பதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, திடீரென கடல் அலை ஆக்ரோஷமாக எழுவதை இவர்கள் அச்சத்துடன் பார்த்திருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து நின்றவர்கள் சுதாரிப்பதர்க்குள் அலை, சுவருக்கு மேலே பொங்கி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள் பரவியது.

giant waves crash Hawaii island wedding caught on camera

புயல்

இதனால் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், கூச்சலிட்டபடி ஓடியிருக்கின்றனர். இதுகுறித்து பேசிய டிலான்,"நல்ல வேலையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேஜைகளில் உணவு பரிமாறப்படுவதற்கு முன்னரே அலை உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் விருந்தினர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவுகளும் சேதமைடையாமல் தப்பித்தது" என்றார்.

கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயல், தங்களது திருமணத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கவலைப்பட்டதாக இந்த தம்பதி தெரிவித்திருக்கிறார்கள். 3 கட்ட ஆபத்தான புயலாக டார்பி வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இருவரின் திருமணமும் திட்டமிட்டபடி நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், திருமணம் நடைபெற்ற இடத்துக்குள் கடல் அலை புகுந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | துபாயில் இருந்து வந்த பயணிக்கு பாசிட்டிவ்.. இந்தியாவில் 2 ஆக உயர்ந்த குரங்கு அம்மை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை..!

 

Tags : #ISLAND #HAWAII ISLAND #WEDDING FUNCTION #BEACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Giant waves crash Hawaii island wedding caught on camera | World News.