ஷேன் வார்னே பற்றி யாருக்கும் தெரியாத 'சீக்ரெட்'.. முதல் முறையாக உடைத்த அணில் கும்ப்ளே.. "ஆஸ்திரேலியா டீம்'ல் இவ்ளோ நடந்துருக்கா??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தன்னுடைய 52 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது, ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த போது, தன்னுடைய விடுதி அறையில் வைத்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில், பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஷேன் வார்னே. அவருடைய பல சூழல் பந்துகள், கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த பந்துகளாக பார்க்கப்படுகிறது.
அழகான நினைவுகள்
அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானின் திடீர் மறைவு, அவருடன் ஆடிய பல கிரிக்கெட் பிரபலங்களையும் கடும் வேதனையில் ஆழ்த்தியருந்தது. வார்னேவுடன் ஆடிய கிரிக்கெட் பிரபலங்கள் அவருடனான அழகிய நினைவுகள் குறித்து தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே, வார்னே குறித்த சில முக்கிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
சச்சின் vs வார்னே
'இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடும் என்பதால், வார்னே எங்களுக்கு எதிராக ஆடும் போது, சிறப்பாக ஆட வேண்டும் என்று விரும்புவார். 1998 ஆம் ஆண்டு நடந்த தொடரின் போது, அனைவரும் சச்சின் vs வார்னே என பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில், வார்னே சிறப்பாக செயல்பட்டார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் பதிலடி கொடுத்திருப்பார்.
யாருக்கும் தெரியாத விஷயம்
அதே போல, ஆஸ்திரேலியா அணி பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று உள்ளது. ஷேன் வார்னேவின் நண்பராக நீங்கள் இருந்தால், அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டி, ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் அச்சுறுத்தல் செய்ய மாட்டார்கள். எனவே, நீங்கள் பேட்டிங் செய்ய போகும் போது வார்னேவின் நண்பராக இருந்தால், ஆஸ்திரேலிய அணி உங்களை வம்புக்கு இழுக்க மாட்டார்கள்.
நட்பு வட்டாரம்
நான் பேட்டிங் செய்ய போகும் போதும், ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் தொந்தரவு செய்ய மாட்டார்கள். தன்னுடைய நட்பு வட்டாரத்தை அப்படி தான் வார்னே கவனித்துக் கொண்டார்' என அணில் கும்ப்ளே முக்கியமான ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிரணி வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம் வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நிலையில், வார்னே ஆடிய சமயத்தில், எதிரணியிலுள்ள அவரின் நண்பர்களிடம் யாரும் சீண்ட மாட்டார்கள் என்ற விஷயம், அதிகம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.