அடேங்கப்பா.. 300 வருசம் பழமையான 'மம்மி'.. "பாக்க கடல் கன்னி மாதிரியே இருக்கு.." ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Mar 07, 2022 08:57 AM

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பார்ப்பதற்கு கடற்கன்னி போன்றே இருக்கும் மம்மி குறித்து பல வியப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

japan 300yr old mermaid mummy with human face baffle scientists

மம்மிக்கள் என்பது பல ஆண்டுகளுக்கு முன், பாதுகாக்கப்பட உயிரினத்தின் சடலத்தை குறிப்பதாகும்.

அப்படி இருக்கும் இந்த உடல்கள், இயற்கையாகவே பல காரணங்கள் கொண்டு பாதுகாக்கப்படுவதும் உண்டு.

ஆய்வுகள்

அப்படிப்பட்ட அழியாத நிலையில் இருக்கும் மனித மற்றும் விலங்குகளின் மம்மிகளை உலகெங்கிலுமுள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, ஆய்வுகள் மேற்கொண்டு வருவதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.

கடற்கன்னியை போன்ற மம்மி

அந்த வகையில், ஜப்பான் நாட்டின் பிசிபிக் கடல் பகுதியிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே ஒரு மம்மி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 இன்ச் நீளமாக உள்ள இந்த மம்மி, பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே உள்ளது. இந்த மம்மி, 1736 - 1741 ஆண்டுக்குட்பட்ட சமயத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மீனவர்கள் வலையில் சிக்கிய மம்மி

இதுகுறித்து, ஜப்பானின் அச்சாகி ஷிம்புன் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் தகவலின்  படி, சில ஆண்டுகளுக்கு முன், இந்த மம்மி பிசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அதில் சிக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கைப்பற்றிய மீனவர்கள், அதனை தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

japan 300yr old mermaid mummy with human face baffle scientists

முடி மற்றும் கண்கள்

அதன் பிறகு, அங்குள்ள கோவில் ஒன்றில் இதனை வைத்துள்ளனர். இந்த மம்மிக்கு கூர்மையான பற்கள் உள்ளது. தலையில் முடி, புருவம் மற்றும் கண்கள் ஆகியவை உள்ளன. மம்மியின் மேற்பகுதி, மனிதனின் முக அமைப்போடும், கீழ்ப்பகுதி செதில்களுடன் கடற்கன்னியை போன்றும் காணப்படுகிறது.

அழியா தன்மை

இதுகுறித்து, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் CT ஸ்கேன் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இந்த மம்மி மதத்துக்கு முக்கியத்துவமாக இருந்துள்ளது என்றும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளது என்றும் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலில் வைத்து பூஜை?

இன்னொரு பக்கம், இந்த மம்மியின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே இல்லை என்றும் ஒரு கூற்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்களின் வலையில் சிக்கியுள்ள இந்த மம்மியை, முதலில் சிலர் வீட்டில் வைத்துள்ளனர். அதன் பிறகு, சில வீடுகள் மாறியுள்ளது. இறுதியில், அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து பூஜை செய்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதையடுத்து, முழுமையான தகவல்களை ஆய்வாளர்கள் பின்பு வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : #300 YR OLD #MUMMY #MERMAID #RESEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan 300yr old mermaid mummy with human face baffle scientists | World News.