"கோவாவுக்கு YOUTH- ஆ இருந்தா தான் போணுமா என்ன?.. நாங்களும் போவோம்ல".. விமானத்தில் ஜாலி ட்ரிப் போன வயதான நண்பர்கள்.. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக ஒவ்வொரு இடமாக பயணம் மேற்கொள்வது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாகும். ஒரே நாட்டிற்குள் பல சுற்றுலா இடங்களுக்கும், அல்லது வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள இடங்களில் சுற்றித் திரிந்து கொள்ள வேண்டும் என்பதும் பலரின் விருப்பமாக இருக்கும்.

அதே போல, நண்பர்கள் சிலர் இணைந்து ஏதாவது ஒரு இடத்திற்கு சுற்றுலா சென்று விட்டு மிகவும் சிறப்பாக அந்த பயணத்தை மாற்ற வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக, கோவா செல்ல நிறைய பேர் திட்டம் போட்டும் வருவார்கள்.
மறுபக்கம், கோவா செல்ல திட்டம் போடும் நண்பர்கள் அதில் தோல்வி கண்டு கடைசி வரை செல்லாமல் இருப்பார்கள் என்பது பற்றியும் நிறைய மீம்ஸ்களை நாம் கடந்து வந்திருப்போம். அந்த வகையில், வயதான சில நபர்கள் இணைந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிக வைரல் ஆகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த டிராவல் ஏஜென்சி ஒன்று, அந்த மாநிலத்தில் உள்ள வயதான நபர்கள், மூத்த குடிமகன்கள் உள்ளிட்டோரை கோவா அழைத்து செல்ல திட்டம் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி, கொச்சியில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவாவுக்கும் விமானத்தில் அனைவரும் சென்றுள்ளனர். இதில், பல பேருக்கு இந்த விமான பயணம் முதல் முறையாக இருந்ததாகவும் தகவல்கள் தேரிவிக்கின்றது.
பொதுவாக, முதியவர்கள் என்றால் அப்படியே தளர்ந்து போய் வீட்டிற்குள் ஒதுங்கி விடாமல், எந்த வயதிலும் ஜாலியாக இப்படி ஊர் சுற்றி பொழுதை கழிக்கலாம் என்பதையும் கோவா சுற்றுலா சென்ற முதியவர்கள் நிரூபித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் கூட, முதியவர்கள் குழந்தைகளாகவே மாறி ஒவ்வொரு இடமாக கண்டு களிப்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

மற்ற செய்திகள்
