‘கொல்லிமலை TRIP’!.. இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு ‘CAPTION’ போட்டு மறுபடியும் மனசை வென்ற நட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 04, 2021 01:06 PM

நண்பர்கள் மற்றும் மனைவியுடன் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் டூர் சென்ற போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

T Natarajan trip to Kolli hills with wife and friends

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். நெட் பவுலராக சென்ற நடராஜனுக்கு, முன்னணி வீரர்கள் காயத்தால் வெளியேறியதால் அந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதனை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நடராஜன், தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

T Natarajan trip to Kolli hills with wife and friends

நடராஜனை போல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமான முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிபெற பெரும் உதவியாக இருந்தனர். இதனால் இவர்களுக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

T Natarajan trip to Kolli hills with wife and friends

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட 6 அறிமுக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கார் பரிசாக வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். சொன்னபடி அவர்களுக்கு புதிய கார்களை பரிசாக வழங்கினார். அதில் நடரஜானுக்கு மஹிந்திராவின் புதிய தார் எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

T Natarajan trip to Kolli hills with wife and friends

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும் நலம் விரும்பியுமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பரிசாக வழங்கி நடராஜன் அழகு பார்த்தார். இதனை ஜெயபிரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடராஜனின் இந்த அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் கொல்லிமலைக்கு நடராஜன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடராஜன், ‘வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும்தான்’ என caption போட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T Natarajan trip to Kolli hills with wife and friends | Sports News.