‘தடுப்பூசி போட்டுட்டு அப்படியே ஊரை சுத்தி பாருங்க’!.. அசத்தல் ‘டூர்’ ப்ளானை அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரஷ்யாவுக்கு சுற்றுலா அழைத்து சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது. மொத்தம் 24 நாட்களுக்கு கட்டணமாக ரூ. 1.29 லட்சம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரஷ்யா அழைத்துச் சென்று இரண்டு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்துவதுடன், டெல்லியில் இருந்து மாஸ்கோ விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் நான்கு நாட்கள் தங்குவதற்கான கட்டணம், மாஸ்கோவில் 20 நாட்கள் தங்குவதற்கான கட்டணம், மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரகளில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் அனைத்தும் செய்து தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம், தங்கள் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதற்கான மருத்துவ சுற்றுலாவுக்கு வரும் ஜூலை மாதத்தில் இருந்து அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. அதனால் இந்தியா உட்பட உலக நாடுகளை சுற்றுலா நிறுவனங்கள், ரஷ்யாவுக்கு மருத்துவ சுற்றுலா அழைத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதற்காக பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள சுற்றுலா ஏஜெண்டுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னதாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் செலுத்தப்பட்டு வரும் சைபர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் மக்களை அழைத்துச் செல்ல முனைப்பு காட்டியது. தற்போது ரஷ்யாவுக்கும் இதேபோல் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மருத்துவ சுற்றுலா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.