விடுதி அறைக்குள் வந்த 'துர்நாற்றம்'.. குழம்பி நின்ற போலீஸ்.. கூகுள் பே உதவியுடன் நடந்த ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், இது தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.
கோவா பகுதியிலுள்ள விடுதி அறை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு ஒரு ஆணும், பெண்ணுமாக அறை எடுத்து தங்கி உள்ளனர்.
தொடர்ந்து, சில தினங்கள் கழித்து, அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழலில், அறைக்குள் இருந்து திடீரென துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
அறையில் இருந்து வந்த துர்நாற்றம்
இதனால், விடுதி ஊழியர்கள் சந்தகேம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, அறையின் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, இளம்பெண் ஒருவரின் உடல் அழகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, உயிரிழந்த பெண் ஸ்ரேயா என்பது தெரிய வந்தது. இவருடன், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் விர்னோத்கர் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கி உள்ளார். ஆனால், அவர் பற்றிய விவரம் எதுவும் விடுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.
கூகுள் பே மூலம் ட்விஸ்ட்
அந்த அறையை எடுத்த போது கூட, ஐடி ஆதாரங்களை அந்த பெண் தான் கொடுத்துள்ளார் என விடுதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால், ஸ்ரேயாவுடன் இருந்த கணேஷ் பற்றிய விவரத்தை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், விடுதியில் கூகுள் பே மூலம் பணத்தை கணேஷ் செலுத்தியது போலீசாருக்கு தெரிய வந்தது.
காரணம் என்ன?
இதன் பின்னர், கூகுள் பே எண் உதவியுடன் விசாரணையை மேற்கொண்ட போது, கணேஷ் விர்னோத்கர் மகாராஷ்டிராவில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, மகாராஷ்டிரா விரைந்து வந்த போலீசார், கணேஷை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஸ்ரேயா தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி வந்ததாகவும், இதனால் அடுத்த நாளே அறையை பூட்டி விட்டு சென்றதாகவும் கணேஷ் தெரிவித்துள்ளார்.
அதே போல, ஸ்ரேயா எப்படி இறந்தார் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கணேஷ் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருந்தும், அவரை ஏன் உள்ளே வைத்து கணேஷ் பூட்டிச் சென்றார் எனபது பற்றிய விவரத்தை அவர் போலீசாரிடம் சரியாக தெரிவிக்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம், ஸ்ரேயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதாகவும் தகவல் குறிப்பிடுகிறது. அவருக்கும், கணேஷுக்குமான உறவு என்ன என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8