2200 ரூபாய் கொடுத்து 2 ஆணுறை வாங்கிய நபர்.. நேரம் பார்க்க ஆசைப்பட்டவருக்கு நேரம் சரியில்ல..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் கைக்கடிகாரம் ஆர்டர் செய்த நருக்கு ஆணுறை வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் அணில் குமார் (வயது 32). இவர் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்காக 2,200 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து கடந்த 15-ம் தேதி கைக்கடிகாரம் வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் அணில் குமாரின் வீட்டுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. உடனே தான் ஆர்டர் செய்த கைக்கடிகாரம் தான் வந்துள்ளது என நினைத்து அதை ஆசை ஆசையாக வாங்கி பிரித்துள்ளார். அப்போது பார்சலுக்கு இருந்த ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அணில் குமார், உடனே பார்சலை கொண்டு வந்த நபரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர், எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு சேர்க்கும் வேலைதான், ஆனால் அதன் உள்ளே என்ன உள்ளது என்பது பற்றி எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
இதனை அடுத்து கைக்கடிகாரம் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என அறிந்த அணில் குமார், உடனே இந்த விவகாரம் தொடர்பாக ஆலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் கைக்கடிகாரம் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
