"சிங்கிள் ஆளா BANK உள்ள வந்து.. கொள்ளையடிச்ச பாட்டி".. விசாரணையில் வெளிவந்த ஷாக்-ஆன தகவல்..தீவிர தேடுதலில் போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 21, 2022 04:59 PM

அமெரிக்காவில் மூதாட்டி போல வேடமிட்டு, ஆண் ஒருவர் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Man dressed as elderly woman robs bank in US

Also Read | "எடுத்துட்டுப்போன பொருளை எல்லாம் திரும்பி கொடுத்திடுங்கோ".. கள்ளக்குறிச்சியை சுற்றி தண்டோரா.. அதிகாரிகளின் புது முயற்சி.. வீடியோ..!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள McDonough நகரத்தில் செயல்பட்டு வரும் வங்கிக்கு நேற்று வயதான மூதாட்டி ஒருவர் சென்றிருக்கிறார். வெள்ளை நிற விக், ஆரஞ்சு கையுறைகள் மற்றும் கருப்பு முகமூடி ஆகியவற்றை அணிந்திருக்கிறார் அவர். வழக்கம்போல பரபரப்பாக இருந்த வங்கிக்குள் சென்ற அவர், தன்னை யாராவது கவனிக்கிறார்களா? என நோட்டம் விட்டிருக்கிறார். அதன் பிறகு வங்கி ஊழியர் ஒருவரிடம் சென்று பேச்சு கொடுத்துள்ளார்.

Man dressed as elderly woman robs bank in US

அதிர்ச்சி

பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்த வங்கி ஊழியரை நெருங்கிய இந்த மர்ம நபர் அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய பைகளில் பணத்தை நிரப்புமாறும் இல்லையென்றால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை உபயோகிக்க வேண்டியிருக்கும் என எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அச்சத்தில் ஆழ்ந்த அந்த பணியாளர், மர்ம நபர் சொல்லியபடியே அவர் கொண்டுவந்திருந்த பிங்க் நிற பையில் பணத்தினை நிரப்பியிருக்கிறார்.

அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய அந்நபர் தனது காரில் ஏறி அங்கிருந்து மறைந்துவிட்டார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Man dressed as elderly woman robs bank in US

விசாரணை

உடனடியாக அந்த வங்கிக்கு விரைந்துவந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டி போல வேடமணிந்து உள்ளே வந்த நபர் பயன்படுத்திய கார் குறித்த காட்சிகளும் இருந்திருக்கின்றன. ஆனால், அந்த காரில் நபர் பிளேட் இல்லாதது பின்னர் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து கொள்ளையடித்தவர் இளைஞராகவும் 6 அடி உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் மூதாட்டி போல வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இது அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பு.?..ஹாஸ்பிட்டல் வாசலில் நடந்த பிரசவம்.. நாட்டையே அதிர வைத்த சம்பவம்..முழு விபரம்..!

Tags : #US #MAN #BANK #MAN DRESSED AS ELDERLY WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man dressed as elderly woman robs bank in US | World News.