"இனி DELETE FOR ME குடுத்தாலும் கவலை இல்ல".. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த செம வசதி..?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Ajith Kumar V | Dec 21, 2022 12:10 AM

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இதனால், அனைவரும் பல விதமான செயலிகளையும் தங்கள் செல்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

Whatsapp messenger new update about delete for me option

அப்படி இருக்கையில் பலருக்கும் அத்தியாவசியமாக அதே வேளையில் முக்கியத்துவம் வாய்ந்த சில செயலிகள் இருக்கும். அதில் மிகவும் குறிப்பான ஒன்று தான் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி.

உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் இந்த Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் உறவினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடம் பேசவும், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பலவிதமான ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதிகள் உள்ளிட்டவை வாட்ஸ் அப்பில் இருப்பதால் பலரின் ஃபேவரைட் செயலியாகவும் இது உள்ளது.

அதுமட்டுமில்லாமல், நாட்கள் செல்ல செல்ல பயனர்களை கவரும் வகையில் புது புது அம்சங்களும், அப்டேட்களையும் வாட்ஸ்அப் செயலி வெளியிட்டு கொண்டே தான் இருக்கின்றன. அப்படி ஒரு சூழலில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகமாகி உள்ள வசதி குறித்த செய்தி, அதிக வைரலாகி வருகிறது.

முன்னதாக வாட்ஸ்அப் செலியில் ஒரு குரூப்பில் அல்லது தனிப்பட்ட நபருக்கு தவறுதலாக ஒரு மெசேஜ் அனுப்பும் பட்சத்தில் அதை "Delete For Everyone" என கொடுத்து அதை நாம் அனுப்பிய நபர் பார்க்காதவாறு செய்து விட முடியும். ஆனால் சிலர் Delete For Everyone அழுதுவதற்கு பதிலாக, Delete For Me என்பதை தேர்வு செய்து விடுகின்றனர். அப்படி கொடுக்கும் போது நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜ் அனுப்பிய நபர் பார்க்கும் வகையில் அமைத்து விடும். இதன் காரணமாக, ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் அவதிப்பட்டும் வருகின்றனர்.

Whatsapp messenger new update about delete for me option

அப்படி ஒரு சூழலில், பயனர்கள் அவதிப்படுவதை தடுப்பதற்காக புதிய அப்டேட் ஒன்றை மெட்டா கொண்டு வந்துள்ளது. அதன்படி  Delete For Me என தவறுதலாக கொடுத்த மெசேஜை Undo என கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து, அந்த மெசேஜை Delete For Everyone கொடுக்க விரும்பினால் கொடுத்துக் கொள்ளலாம்.

Whatsapp messenger new update about delete for me option

அதற்கான ஆப்ஷன் ஐந்து நொடிகள் திரையில் தோன்றும். இந்த ஐந்து நொடிகளுக்குள் தவறுதலாக Delete For Me கொடுத்த குறுஞ்செய்தியை Delete For Everyone  கொடுத்து விடலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் அனைவருக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags : #WHATSAPP #UPDATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Whatsapp messenger new update about delete for me option | Technology News.