'6 மாச குழந்தை'... 'விடாமல் துரத்திய பயம்'... 'ஆனா இப்படி ஒரு கணவன் கூட வாழ கொடுத்து வைக்கலியே'... நொறுங்கிப்போன மனைவி!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய 6 வயது குழந்தையின் உயிருக்கு, தன்னால் ஆபத்து வந்து விடுமோ என்ற பாசமிகு தந்தையின் அதீத பயம், அவர் குடும்பத்தையே சிதைத்து விட்டது.

டேவிட் வார்னர் என்ற 27 வயது நிரம்பிய இளைஞர் சில தினங்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில் காத்திருக்குமாறு வார்னரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அந்த இடத்தில் இருந்தால், தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைரஸை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பரப்பிவிடுவோமோ என்ற அதீத அச்சத்தில் வார்னர் இருந்துள்ளார்.
மேலும், அந்த அசௌகரியமான சூழலில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று எண்ணி, கோவிட் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அவசர அவசரமாக கொரோனா வார்டில் இருந்து தப்பித்து விட்டார்.
மேலும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நாள் முதல், கொரோனா வார்டில் இருந்த நினைவுகள் அவரை வெகுவாக பாதித்துள்ளது. மன அமைதி கெட்டுப் போனது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி, வார்னர் திடீரென மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும், வார்னர் மாரடைப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, வார்னர் மறைந்த சில நாட்கள் கழித்து, அவரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில், அவருக்கு கோவிட் நெகடிவ் (தொற்று இல்லை).
இதைக் கண்டு வார்னரின் மனைவி உடைந்து அழுதார். இல்லாத தொற்றுக்கு பயந்து, தன்னுடைய குழந்தைக்கு தன்னால் ஆபத்து வந்துவிடுமோ என்ற அதீத அச்சத்தில் மன அமைதி இழந்து, வார்னர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை விட அதனால் ஏற்படும் அச்சம் மிகவும் ஆபத்தானதாக அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்
