தூக்கமே வரமாட்டேங்குதா?.. இதை ட்ரை பண்ணிப்பாருங்க.. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தூக்கமின்மை பற்றி போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலத்தில் நம்மால் நினைத்த காரியங்களை எளிதில் செய்துவிட முடிகிறது. உலக நடப்புகளை அறிந்துகொள்வது தொடங்கி, வீட்டில் இருந்தபடியே உணவு ஆர்டர் செய்வது வரையில் ஒரு செல்போனால் செய்துவிட முடிகிறது. ஆனால், அதீதம் என்பது எதிலுமே ஆபத்துதான். செல்போனும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
அதீத செல்போன் பயன்பட்டால் குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன்களை உபயோகிப்பதால் பலரும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா எரிக் சோல்ஹெய்ம் என்பவரின் ட்வீட்டை பகிர்ந்து அதில் கமெண்டும் செய்திருக்கிறார். அந்த பதிவில், ஒரு மருத்துவ குறிப்பின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த குறிப்பில் நோயாளியின் பெயர்: ஆனந்த் எனவும் சிக்கல் : தூக்கமின்மை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை எனக்குறிப்பிட்டு,"உங்கள் கணினி மற்றும் தொலைபேசியை தூக்கி எறியுங்கள்" என எழுதப்பட்டுள்ளது.
Looks like you were tweeting this to me, @ErikSolheim ??
By the way, my wife prescribed this for me aeons ago. And she doesn’t even possess a medical degree…😃 https://t.co/UOu5lp54sE
— anand mahindra (@anandmahindra) November 15, 2022
இந்த பதிவில் ஆனந்த் மஹிந்திரா,"எரிக் சோல்ஹெய்ம், நீங்கள் இதை எனக்கு ட்வீட் செய்தீர்கள் போல் தெரிகிறது. என் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இதை எனக்கு பரிந்துரைத்தார். மேலும் அவர் மருத்துவர் கூட இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | சந்தேகமா?.. விராட் கோலி மேலயா?.. ICC பகிர்ந்த தெறி வீடியோ.. குளிர்ந்து போன கோலி ரசிகர்கள்..!