"நீங்க எந்த வேலைல இருந்தாலும்.. இந்த ஒரு பாடத்தை மட்டும் LIFE-ல கத்துக்கோங்க".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் நம்முடைய இலக்குகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் உத்வேகம் அளிக்கக்கூடிய பதிவுகளை அல்லது வீடியோக்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வீடியோ
இந்த வீடியோவில் பறவை ஒன்று எதிர்காற்றில் பறக்க முற்படுகிறது. தனக்கான இரையை தேடுவதில் அந்த பறவை முழு கவனத்துடன் இருக்கிறது. எதிர் திசையில் இருந்து காற்று வீசுவதால் அதன் இறக்கைகள் விசிறிகள் போல அங்குமிங்கும் அசைகின்றன. ஆனாலும், அந்தப் பறவையின் தலை இறையின் மீதே இருக்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இயற்கை நம் சொந்த வாழ்க்கைக்கு பாடங்களை வழங்க தவறுவதில்லை. சீற்றம் மிகுந்த காலங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், காற்று உங்களைத் தாக்கும்போது உங்கள் சிறகுகள் படபடக்கட்டும். ஆனால் உங்கள் தலையை நிலையாக வைத்திருங்கள். உங்கள் மனதை தெளிவாகவும், உங்கள் கண்களை கவனமாகவும் வைத்திருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை இதுவரையில் 4.4 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், நெட்டிசன்கள் இதேபோன்று தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
Nature never fails to provide lessons for our own lives. How do you face turbulent times? No matter what your profession is, let your wings flap as the winds buffet you, but keep your head stable, your mind clear & your eyes watchful. #MondayMotivaton pic.twitter.com/YDVm1uJXx5
— anand mahindra (@anandmahindra) October 10, 2022
Also Read | Toss போடணும்.. காசு எங்க?.. கிரவுண்டில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!