2 வருஷம் ஆச்சு... பெருசா ஒண்ணும் 'பர்பாமென்ஸ்' இல்ல... பேசாம அவரை 'கேப்டனா' போடலாம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 18, 2019 12:42 PM

ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நாளை(19-ம் தேதி) கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Gambhir feels it\'s right time to give Shubman Gill KKR captaincy

இந்தநிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இளம்வீரர் சுப்மன் கில்லை போடலாம் என முன்னாள் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், '' கடந்த 2 வருடங்களாக தினேஷ் கார்த்திக்கின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.

எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். குறிப்பாக இளம்வீரர் சுப்மன் கில்லை அணியின் கேப்டனாக நியமிக்கலாம்,'' என தெரிவித்து இருக்கிறார். கடந்த 2 வருடங்களும் டாப் 4-க்குள் இடம் பிடிக்கவில்லை என்பதால் இந்த நாளைய ஏலத்தில் டாப் வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.