என்னடா இது...! ரோகித் ஷர்மாவுக்கு வந்த சோதனை... எரியுற தீயில எண்ணெய கொண்டு வந்து ஊத்திட்டாங்களே...! 'அதோட மட்டும் முடியல...' - மேலும் ஒரு எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் அபராத தொகையையும் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியமில் ஒன்றுகொன்று மோதி கொண்டது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை பிட்சில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 20 ஓவர்களில் 137 ரன்களை எடுத்தது. சென்னை மைதானத்தின் பிச் காரணமாக இந்த ரன்களை எடுக்கவே மும்பை அணி பெரும்பாடுப்பட்டது என சொல்லலாம்.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணி பவுண்டரிகளே அடிக்காமல் ஒன்று இரண்டு என ஒரு வழியாக ஆடி கடைசி ஓவரில் 138/4 என்று வெற்றி பெற்றனர்.
இந்த மோசமான பௌலிங் மும்பை அணியை அபராதம் கட்டும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. நேற்று ஓவர்களை மிகவும் தாமதமாக வீசி, குறித்த நேரத்தில் பௌலிங்கை முடிக்காமல் இருந்தாதற்காக மும்பை அணியின் கேப்டனுக்கு சுமார் ரூ.12,00,000 அபராதம் விதிக்கபட்டுள்ளது.
அதோடு இந்த சீசனில் இதுவே முதல் ஓவர் ரேட் அபராதமாகும். அடுத்தடுத்து ஓவர் ரேட் விவகாரத்தில் சிக்கினால் இவரது அணிக்கு பெரிய அளவிலான தொகை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.