"என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு"... 'ஏற்கனவே இருக்க கடுப்புல 'இது' வேறயா???'... 'தொடர்ந்து துரத்தும் சோகம்!!!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று களத்தில் மிகவும் கோபமாக நடந்து கொண்ட பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடப்பு தொடரில் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பிளே ஆப் செல்வதற்கான மோதல் கடுமையாக நடந்து வரும் நிலையில், நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட் செய்த பஞ்சாப் 185 ரன்கள் எடுக்க, 17.3 ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
நேற்று பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் சிறப்பாக ஆடி மூன்றாவது முறையாக மீண்டும் அரை சதம் அடித்தார். அதோடு நேற்றுதான் அவர் டி20 போட்டிகளில் 1001 சிக்ஸ் என்ற மைல் கல்லையும் எட்டினார். ஆனால் நேற்று சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெயில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். அதை சற்றும் எதிர்பார்க்காத கெயில் அவுட்டானதும் கோபத்தில் பேட்டை தூக்கி வீசினார். வேகமாக பேட்டை தரையில் அடித்தார்.
அதன்பின் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட கெயில் ஆர்ச்சருக்கு கை கொடுத்துவிட்டு வெளியேறியபோதும், விதிப்படி கெயில் இப்படி பேட்டை தூக்கி எறிந்தது தவறு என்பதால் களத்தில் இருந்த நடுவர்கள் கெயில் மீது புகார் தெரிவித்துள்ளனர். கெயில் நடந்து கொண்டது லெவல் 1 விதிமீறல் என்பதால் அதன் காரணமாக தற்போது அவருடைய சம்பளத்தில் இருந்து 10% பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிமேல் இப்படி நடக்க கூடாது என அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Chris Gayle #KXIPvRR #IPL2020 pic.twitter.com/Rsf8Yk2gtc
— காளி (@rkaalirasu) October 30, 2020