"எத்தன தடவதான் சொல்றது...??? இனியும், இது தொடர்ந்தா'... 'ரூ 1 கோடி அபராதம், 2 புள்ளிகள் மைனஸ்..." - 'CSK வீரர் மீதான புகாரை தொடர்ந்து'.... 'பிசிசிஐ எச்சரிக்கை!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களின்றி நடைபெற்று வருகிறது.

கொரோனோ வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்கள் பயோ-பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள சூழலில், இதில் இருக்கும் வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது.
ஒருவேளை வீரர்கள் விதிமுறையை மீறினால் ஆறுநாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மீண்டும் விதிமுறையை மீறினால் ஒரு போட்டியில் தடைவிதிக்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையாக மீறினால் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள்.
முன்னதாக சென்னை அணி வீரர் கே.எம். ஆசிப் பயோ-பபுள் விதிமுறையை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில், வீரர்களை வெளியே அனுமதித்தால் அந்த அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறையாக அனுமதித்தால் ஒரு புள்ளி திரும்பப் பெறப்படும் எனவும், மூன்றாவது முறையாக அனுமதித்தால் 2 புள்ளிகள் அதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் புள்ளிகள் கழிக்கப்படும் எனவும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
