'பெண்கள் 'அந்த' விஷயத்துல ரொம்ப கஷ்டப்படுறாங்க'!.. வேற லெவலில் சிந்தித்த அரசு!.. அதிரடி அறிவிப்பால் வாயடைத்துப் போன உலக நாடுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Sep 09, 2021 10:55 PM

உலகம் முழுவதும் பெண்கள் முன்னேறுவதற்காக அவர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு அறிவிப்பு பேசு பொருளாக மாறியுள்ளது.

france give free access to contraception women upto 25

பிரான்ஸில் 2022 ஜனவரி 1 முதல் 25 வயது வரையிலான பெண்களுக்கு கருத்தடை இலவசம் என சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran அறிவித்துள்ளார்.

2022 தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த கொள்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 21 மில்லியன் யூரோ செலவாகும் என Olivier Veran குறிப்பிட்டுள்ளார்.

சில இளம் பெண்களிடையே கருத்தடை பயன்பாடு குறைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நிதி என்று Olivier Veran தெரிவித்தார்.

மேலும், "பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பது தாங்கிக்கொள்ள இயலாத ஒன்று. அதிக செலவாகும் என்பதால் அவர்கள் விரும்பினால் கூட கருத்தடை செய்ய முடியாத நிலை இருக்கிறது" என Olivier Veran கூறினார்.

 

பிரான்சில் இப்போது வரை கருத்தடைக்கான இலவச அணுகலுக்கான வயது வரம்பு 18 என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. France give free access to contraception women upto 25 | World News.