இவ்ளோ சீக்கிரமா எப்படி வர முடியும்...? வெளிய போய் பார்த்தவருக்கு அதுக்கு மேல அதிர்ச்சி...! 'உடனே சோசியல் மீடியால போட்ட ஒரு போஸ்ட்...' - 10 மணி நேரத்துல நடந்த நல்ல விஷயம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 18, 2021 09:41 PM

ஹைதராபாத்தை சேர்ந்த ராபின் முகேஷ் என்ற நபர் கடந்த திங்கள்கிழமை இரவு சொமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

Hyderabad zomoto Delivery Boy speed delivery on bicycle

ஆர்டர் செய்த 20 நிமிடங்களில் அவரின் உணவு வாசலுக்கு வந்து சேர்ந்தது. உணவை வாங்க வெளியே வந்த ராபினுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் உணவு கொண்டு வந்த சொமோடோ ஊழியர் சைக்கிளில் வந்துள்ளார்.

ராபினின் வீட்டிற்கும் உணவு ஆர்டர் செய்த இடத்திற்கும் இடையே 9 கி.மீ தொலைவு இருந்த நிலையிலும், டெலிவரி பாய் ஆர்டர் செய்த உணவை சைக்கிளில் வெறும் 20 நிமிடத்தில் கொண்டு வந்தார்.

இதுகுறித்து ராபின், டெலிவரி செய்ய வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவரின் பெயர் முகமது அகில் எனவும், தான் ஒரு வருடமாக சொமாட்டோவில் வேலை செய்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட ராபின், உடனடியாக தனது மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'நான் சொமட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டரை முகமது அகில் மின்னல் வேகத்தில் கொண்டு வந்து டெலிவரி செய்தார்.

ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் செய்யும் போது முகமது மெஹதிபுட்னத்தில் இருந்தார். நிலோஃபர் லக்திகாபுல் பகுதியில் என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் ஆகி, அதனை கிங் கோட்டி பகுதியில் டெலிவரி செய்தார்.

முகமது இப்போது பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்கிளால் தான் சாத்தியமாகிறது. நீங்கள் இவரை பார்க்க நேரிடும் போது தாராளமாக உதவி செய்யுங்கள். நான் டீ ஆர்டர் செய்திருந்தேன். அது மிகவும் சூடாக இருந்தது' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல், முகமது அகிலுக்காக சமூகவலைத்தளம் மூலம் பண்ட் ரைஸ் செய்து, 10 மணி நேரத்தில் சுமார் 60,000 வரை நிதி கிடைத்துள்ளது. அதன்பிறகு கிட்டத்தட்ட 73,000 வரை நிதியுதவி செய்திருந்தனர்.

Hyderabad zomoto Delivery Boy speed delivery on bicycle

கிடைத்த நிதியில் ராபின் அகிலுக்காக ரூ.65,000 மதிப்புள்ள டிவிஎஸ் XL பைக் புக்கிங் செய்துள்ளார். மேலும், 'இரண்டு நாள்களில் பைக்கை டெலிவரி செய்துவிட்டார்கள். அகிலுக்கு ரெயின் கோட் மற்றும் ஹெல்மெட் வாங்கிக்கொடுக்கவுள்ளேன். மீதமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்துக்காக அவரிடமே கொடுத்து விடுவேன்' என ராபின் தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hyderabad zomoto Delivery Boy speed delivery on bicycle | India News.