'நாகர்கோவில் காசிக்கு டப் கொடுத்த சுமன்'... 'உனக்கு ஒரு போட்டோ வந்திருக்கும் பாரு'... 'அதிர்ந்துபோன பெண்கள்'... கிழிந்த முகமூடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிஜயவாடா பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவர், ஐதராபாத் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

பகல் நேரத்தில் தனியார் நிறுவன ஊழியராக இருக்கும் சுமன், இரவு நேரத்தில் பகீர் காரியம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தி போலி கணக்கு ஒன்றை சுமன் தொடங்கியுள்ளார்.
தன்னிடம் பேசுவது பெண் தான் என நம்பிய சுமார் 70 பெண்கள், சுமனுடன் நட்பில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சுமன் அதிகம் பேசி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண்களின் புகைப்படங்களையும் அவர் சேகரித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதிகம் பழக்கமான பெண்களிடம் தன்னுடைய நிர்வாண மற்றும் அறை நிர்வாண புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுக்க சுமன் ஆரம்பித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், தான் சொல்வது போல கேக்கவில்லையென்றால், உங்களின் புகைப்படங்களை எல்லாம் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு விடுவேன் என்றும் குறிப்பிட்ட பெண்களை மிரட்டியுள்ளார். இது பற்றி, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், அவர்கள் சுமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மற்ற செய்திகள்
