'என்ன காரியம் பண்ணிருக்காங்க'!?.. சிபிசிஐடி விசாரணையில்... புதிய திருப்பம்!.. சிவசங்கர் பாபாவின் பெண் பக்தை கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைதாகியிருக்கும் சிவசங்கர் பாபாவின் பெண் பக்தை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
![siva shankar baba devotee arrested by cbcid pocso details siva shankar baba devotee arrested by cbcid pocso details](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/siva-shankar-baba-devotee-arrested-by-cbcid-pocso-details.jpg)
சுஷில் ஹரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு வழக்கில் சுஷ்மிதா என்ற ஒரு பெண்ணின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சுஷ்மிதா என்பவரிடம் சுமார் 4 மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் சிவசங்கர் பாபாவின் பக்தர் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, பள்ளியில் பயிலும் மாணவிகளை மூளை சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து செல்லும் பணியை அவருடைய பெண் பக்தை சுஷ்மிதா செய்து வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
அதன் அடிப்படையில் தான், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுஷ்மிதாவை கைது செய்துள்ளனர்.
தற்போது அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் 2 ஆசிரியைகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)