'குடி போதையில அது மேல விழுந்து இறந்துட்டாரு...' 'ஷாக் தந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மைகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் மாநகராட்சி அதிகாரியை கொன்றுவிட்டு, தாயும் மகளும் விபத்து போல் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மும்பையின் பால்கர் மாவட்டம், நாலச்சோப்ரா அனுமன் நகரில் வாழ்ந்து வருகிறார் மாநகராட்சி ஊழியரான சுரேஷ்(46). இவருக்கு ஜாசு(39) என்ற மனைவியும், மோனிகா (22) என்னும் மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவர் அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவனை அழைத்து செல்லும் போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ் கண்ணாடியில் தவறி விழுந்து, கண்ணாடி துகள்கள் குத்தியதில் உயிரிழந்து விட்டதாக சுரேஷின் மனைவியும், அவரது மகள் மோனிகாவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தற்போது வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து சுரேஷின் மகள் மற்றும் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினரின் விசாரணையில், சுரேஷ் அவர்களின் மனைவி ஜாசு கூறுகையில், தன் கணவர் சுரேஷ் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தன்னுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்றும் சந்தேகம் காரணமாக தனக்கும் தன் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரத்தில் தானும், மகள் மோனிகாவும் அவரது தலையை ஜன்னலில் மோத செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் ஜன்னனில் இருந்து உடைந்து விழுந்த கண்ணாடி துண்டால் அவரது மார்பில் குத்தியதாவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தாரையும், அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன் கணவரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய மனைவியையும், மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
