விமானம் ஏறிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. "இந்த வாய்ப்பு எல்லாம் எங்களுக்கு எப்போ கிடைக்குமோ??".. ஏங்கும் நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக பேருந்து, ரெயில் என எதில் பயணம் மேற்கொண்டாலும், ஜன்னலோர இருக்கை கிடைக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள்.

அப்படி நீங்கள் ஏறும் சமயத்தில், ஆட்கள் அதிகமாக இருந்தால் முண்டியடித்துக் கொண்டு போய் உட்கார வேண்டும் என நினைப்போம்.
அதே வேளையில், கூட்டம் குறைவாக ஆட்களே இல்லாமல் இருந்து, வசதியாக போகும் வாய்ப்பு கிடைத்தால், ஜன்னல் சீட்டிற்கும், அந்த வாகனத்திற்கும் நீங்கள் தான் ராஜா.
இளம்பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு
அந்த வகையில் இளம் பெண் ஒருவர், விமானத்தில் தனியாக பயணம் மேற்கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விமானத்தில் யாரும் முன்பதிவு செய்யாத நிலையில், இளம்பெண் ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார். வாழ்நாளில் ஒருவருக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான ஒன்று.
அசத்தல் வீடியோ
அரோரா டோரஸ் என்ற பெண் ஒருவர், நார்வேயில் உள்ள ரோரோஸுக்குச் செல்லும் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். விமானத்தில் ஏறிய பிறகு, தான் ஒருவர் மட்டும் தான் அந்த மொத்த விமானத்திற்கே சிங்கிள் பயணி என்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஆச்சரியம் அடைந்த அவர், இது தொடர்பாக வீடியோ ஒன்றினை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
குழந்தை போன்ற மனநிலை
இவை அனைத்தையும் விட, விமானத்திற்குள் அரோராவுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. தனி பயணி என்பதால், விமானிகளுடன் காக்பிட்டில் உட்கார்ந்து பயணம் செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விமானத்தில் முன்பகுதியில் இருந்து கொண்டு, அவர் எடுத்த காட்சிகள் இணையத்தில் டிரெண்ட் அடித்து வருகிறது. மேலும், குழந்தை போல ஏதோ பெரிதாக சாதித்து விட்டதை போன்று மிகவும் குதூகலமான மனநிலையில் அரோரா பயணம் செய்துள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இது தொடர்பான வீடியோவை அவர் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவியது. பலரும் ஒரு பயணிக்கு வேண்டி, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே போல, வாழ்வில் ஒரு முறையாவது தங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்திலும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
