‘கிணற்றில் குதித்ததும் தலையில் கை வைத்த இளைஞர்’.. நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவருக்கு நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![College student drowns in well near Pudukkottai College student drowns in well near Pudukkottai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/college-student-drowns-in-well-near-pudukkottai.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகமது ஆசாத் (வயது 19). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புல்வயலுக்கு முகமது ஆசாத் வந்துள்ளார்.
இதனை அடுத்து நேற்று மாலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது முகமது ஆசாத், மேலிருந்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். தண்ணீருக்குள் குதித்த சிறிது நேரத்தில் தலையில் கைவைத்தவாறு மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதன்பின்னர் உடனடியாக சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்பு முகமது ஆசாத்தின் உடலை மீட்டனர். முகமது ஆசாத், தனது நண்பர் ஒருவருடன் மேலிருந்து கிணற்றில் குதிப்பதை மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ரம்ஜான் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)