IPL 2022: சாமியை மறந்த ரசிகர்கள்.. தோனியை சுற்றி வளைத்த கூட்டம்.. அன்பால் நெகிழ்ச்சியடைந்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pandidurai T | Feb 15, 2022 07:48 PM

ஐபிஎல் ஏலம் முடிந்த பிறகு ஜார்கண்டில் உள்ள ஒரு கோயிலுக்கு  தோனி சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Fans surrounded Dhoni as Sami came to the temple to bow down

15 ஆவது ஐபிஎல் தொடரில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் மீண்டும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக, எம்எஸ். தோனியை 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு சிஎஸ்கே தக்கவைத்தது.  தோனியை விட சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் அதிக விலைக்கு மற்ற வீரர் தக்கவைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹரை தங்கள் அணியில் தக்கவைக்க ரூ.14 கோடி செலவழித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக, சாஹர் இப்போது ஐபிஎல் ஏல வரலாற்றில் யுவராஜ் சிங்குடன் இணைந்து அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது இந்தியர் ஆக திகழ்வார். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஜார்கண்டில் உள்ள பூண்டுவில் உள்ள தியோரி கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் கூடியதால் இயல்பு நிலை பாதித்தது.

தோனி ரசிகர்களுடன் நின்று செல்ஃபி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.   இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்.எஸ். தோனி உலகம் முழுவதும் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார். அவரை நேரில் சந்தித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதையும், எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை வீடியோவில் பார்க்கும்போதே தெரிகிறது. இந்நிலையில்,  ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் நேற்று பிற்பகல் ராஞ்சியில் உள்ள தியோரி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தங்களிடம் இருந்த செல்போனை எடுத்து புகைப்படம் எடுத்தனர்.  40 வயதான அவர் ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவராக அறியப்படுகிறார். இதற்கு முன்பும் தோனி கோயிலுக்கு சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியுள்ளன.

Tags : #MS DHONI #CSK #IPL 2022 #CHENNAI SUPER KINGS #SELFIE PHOTO #FANS #TEMPLE VISIT DHONI #VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fans surrounded Dhoni as Sami came to the temple to bow down | Sports News.