இப்படி என்ன 'தனியா' தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்களே...! 'ஜோடியா உலகத்தை சுற்றி வந்த பிரபல தம்பதி...' - கணவருக்கு நேர்ந்த சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுதும் சுற்றுலா சென்று பிரபலமான கேரளாவை சேர்ந்த தம்பதிகளில் ஒருவர் நேற்று (19-11-2021) மாரடைப்பால் இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் 71 வயதான கேஆர் விஜயன். விஜயனும் அவரது மனைவி மோகனாவும் சேர்ந்து 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்னும் டீ கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
இவர்கள் தங்களுடைய சொந்தமாக உழைத்து அதில் வரும் லாபத்தை வைத்து ஒரு வருடத்தில் 3 மாதங்கள் உலகத்தை சுற்றிபார்க்க கிளம்பி விடுவார்கள். இவர்களின் இந்த செயலே இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.
தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தின் சிறு பகுதியை (தினமும் 300 ரூபாய்) தினம் தினம் தம்பதியர் சேமித்து வைத்து தன் மனைவியின் நீண்ட நாள் கனவான இஸ்ரேல் நாட்டிற்கு 2007-ம் ஆண்டு விஜயன் அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின் கடந்த தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன் கடந்த 14 ஆண்டுகளில் விஜயன் - மோகனா தம்பதி 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களை குறித்து அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா 2019-ஆம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு உதவி செய்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 2020ஆண் ஆண்டு சுற்றுலா செல்லாத இந்த தம்பதிகள் கடைசியாக கடந்த மாதம் 21 -ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று விஜயன் கொச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.