நடிகர் விவேக் 'மரணத்திற்கு' உண்மையான 'காரணம்' என்ன...? - வெளியாகியுள்ள 'ஆய்வு' முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக் சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது.

நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு அளிக்க்கும் வகையில் தானும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு, பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் படி பரிந்துரைத்தார்.
மேலும், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட விவேக் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்களுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
மேலும், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என பல செய்திகளும் பரப்பப்பட்டது. நடிகர் விவேக் மரணத்தில் தேவையான விளக்கம் வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மரணமடைந்ததாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.
தற்போது இந்த புகாரின் அடிப்படையில் 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய குழு தகவல் தங்களின் அறிக்கையில் நடிகர் விவேக் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமல்ல என அறிவித்துள்ளது. மேலும், விவேக் மரணத்திற்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பே காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
