'அஞ்சு ரூபாய் துட்டும், துணி நனைக்குற சோப்பும் வாங்கவா...' இவ்வளவு கஷ்டப்பட்டு 'அத' ஆர்டர் பண்ணினேன்...! 'பல வருஷ கனவு...' - 'பார்சலை' பிரித்தபோது 'நொறுங்கிப்' போன இளைஞர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கொச்சி ஆலுவாவைச் சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி அமேசானில் ரூ.70,900-க்கு ஆப்பிள் ஐபோன் 12 புக் செய்துள்ளார். இதற்கான பணத்தையும் அமேசான் பே மூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அக்டோபர் 15-ஆம் தேதியே பார்சல் வந்துள்ளது.
இப்போதெல்லாம் அமேசான் பிளிப்கார்ட் என ஆன்லைன் விற்பனையில் ஏமாற்று வேலைகள் நடைபெறுவதால் நூருல் அமீன் உஷாராக டெலிவரிபாய் பார்சலை கொண்டுவந்த போது அவரின் முன்னிலையில் பார்சலை பிரித்து பார்த்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
பார்சலை பிரித்து பார்த்தால் ஆப்பிள் ஐபோன் 12 பாக்ஸில் ஒரு சலவை சோப் மற்றும் ஐந்து ரூபாய் நாணயமும் இருந்திருக்கிறது. இதனைக் கண்ட அமீன் அதிர்ச்சியடைந்து அந்த வீடியோவை சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு, மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் அமேசான் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி நிலையில் நூருல் அமீனுக்கு அமேசான் நிறுவனம் 70,900 ரூபாயை திருப்பி அனுப்பியது. அதோடு, தங்களிடம் வேறு ஐபோன் கையிருப்பு இல்லை என்பதால் பணம் திருப்பி அனுப்பப்பட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு, அமீனினுக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 12 கவரில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை கேரள சைபர் க்ரைம் போலீஸார் சோதித்தத்தில் அந்த போன் ஜார்கண்ட் மாநிலத்தில் உபயோகத்தில் இருப்பது தெரியவந்த நிலையில், இதுகுறித்த விசாரணை தொடரும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.