வெறும் 'பாஸ்போர்ட் கவர்' தானே ஆர்டர் பண்ணினேன்...? இதுல என்ன 'பாஸ்போர்ட்'டே வந்துருக்கு...! - பிரித்து பார்த்தவருக்கு அதிர்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் எங்கிலும் ஆன்லைன் வர்த்தகம் பெருகி வரும் நிலையில் அதற்குண்டான பின்விளைவுகளையும் மக்கள் சந்திக்க வேண்டியதுள்ளது.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டீலர்கள் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே ஷாப்பிங் செய்ய உதவிகரமாக இருக்கிறது. அதோடு, ஆன்லைன்னில் விலை குறைவாக இருப்பதை நம்பி வாங்கும் பொதுமக்களில் சிலர் பிரச்சனையில் மாட்டிக்கொள்வதும் உண்டு.
அவர்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பதும், செங்கல், கண்ணாடி பாட்டில் எனவும், ஐ-போனுக்கு பதில் சோப்பு வருவதும் என அடிக்கடி ஏதாவது செய்தி வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதேபோல் பாஸ்போர்ட் கவர் விண்ணப்பித்த கேரள வாலிபருககு ஒரிஜினல் பாஸ்போர்ட்டே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளமாநிலம் வயநாட்டு காணியான்பற்றான் பகுதியை சேர்ந்த மிதுன்பாபு கடந்த 30-ம் தேதி ஒரு பிரபல இணைய தளத்தில் பாஸ்போர்ட் கவரை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த இரு நாட்களில் பொருள் வீட்டுக்கு வரவே ஆவலுடன் அதனை பிரித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த மிதுன்பாபுவிற்கு பாஸ்போர்ட் கவர் மட்டுமா வேண்டும் இந்தாங்க பாஸ்போர்ட்டே வைத்து கொள்ளுங்கள் என ஒரிஜினல் பாஸ்போர்ட் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
இந்த பாஸ்போர்ட் திருச்சூரை சேர்ந்த பஷீர் என்ற 10 வயது சிறுவனின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரியவந்துள்ளது. அதன்பின் மிதுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்த போது இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது என பதிலையும் அளித்துள்ளது அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம்.
மேலும், தனக்கு வந்த பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் என நினைத்தால் ஒரு தகவலும் இல்லாததால் போன் நம்பரை தேடினார். போன் நம்பர் கிடைக்காத காரணத்தினால் பாஸ்போர்ட் எண்ணில் இருந்த முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார் மிதுன்.

மற்ற செய்திகள்
