இந்த சின்ன வயசுல 'அவருக்கு' இப்படி ஆயிடுச்சே...! 'NZ VS AFG' மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி பேரிடியாக வந்த செய்தி...! - பிசிசிஐ பணியாளர் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறுவதற்கு முன் வந்த மரண செய்தி அனைவரிடையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பிட்ச் பராமரிப்பாளர் இந்தியாவை சேர்ந்த மோகன் சிங் என்பவர் திடீரென காலமாகியுள்ளார்.
மோகன் சிங் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்கும் முன்பாக திடீரென உயிரிழந்ததாக அமீரக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த செய்தியால் இந்திய கிரிக்கெட் வாரியமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால், மோகன் சிங், பிசிசிஐ-யின் தலைமை பிட்ச் பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தவர்.
கடந்த 2000-ஆம் ஆண்டு மோகன் சிங், இந்தியாவில் இருந்து பணி நிமித்தமாக அமீரகத்துக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதுகுறித்து தல்ஜித் சிங், கூறும் போது, 'மோகன் என்னிடம் ஒரு சிறுவனாக வேலை பார்க்க வந்தான். சிறுவன் என்று சொல்வதால் அவனை குறைவாக எடை போட்டுவிட கூடாது, அவன் மிகவும் சிறந்த ஒரு சிறுவனாக விளங்கினான்.
மோகன் மிகவும் திறமைசாலி, தன் வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பாளியாக விளங்கினான். உத்தரகண்ட் கார்மீலை சொந்த ஊராக கொண்ட மோகன் அமீரகத்துக்கு சென்றாலும் கூட இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னை வந்து சந்திப்பான்.
அவன் இவ்வளவு இளம் வயதில் அவன் மறைந்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது' என தல்ஜித் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.