30,000 FRESHERS-க்கு 'வேலை' ரெடியா இருக்கு...! 'பிரபல ஐடி நிறுவனம் அதிரடி அறிவிப்பு...' 'ஏன் இந்த முடிவு எடுத்தோம்னா...' நிறுவன தலைவர் அளித்த தகவல்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் கொரோனா பரவலுக்கு பின் ஐ.டி நிறுவனங்கள் அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலின் போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதோடு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஐடி துறையினரின் தேவையானது அதிகரித்து வருகிறது.
அதோடு, விப்ரோ நிறுவனத்தில் கடந்த 90 நாட்களில் மட்டும் 20% ஊழியர்கள் தங்களது வேலையினை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐடி துறை குறித்து வெளியான செய்தியில் விப்ரோ மட்டுமல்லாது டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பலர் வேலையை விட்டு சென்றுவருவதாக கூறப்படுகிறது.
இதில் முதலிடத்தில் இருப்பது விப்ரோ நிறுவனம். அந்நிறுவனம் 2021-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 20.5% அட்ரிஷன் விகிதம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் 11.9% அட்ரிஷன் விகிதம் அதிகரித்தும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20.1% அதிகரித்தும், ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தில் 15.7% ஆகவும், இதே காக்னிசண்ட் நிறுவனத்தில் 33% ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து விப்ரோவின் தலைவர் மற்றும் சி.ஹெச்.ஆர்.ஓ செளரப் கோவில் கூறும் போது, 'அட்ரிஷன் விகிதம் என்பது தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் இருந்தாலும், திறமைக்கான தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. டிஜிட்டல் துறைக்கான தேவையானது அதிகரித்துள்ளது.
விப்ரோ நிறுவனம் 2022 - 23ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பல ஒப்பந்தங்களை ஐடி நிறுவனங்கள் போட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.