'அப்பாவ பெருமப்பட வைக்கணும்'.. மகிழ்ச்சிக்கு நடுவே நேர்ந்த சோகம்.. நெகிழவைத்த வீராங்கனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 23, 2019 08:43 PM

ஜப்பானில் நடந்த பெண்கள் உலக ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி சிறப்பாக விளையாண்டு தொடரை வென்றுள்ளது.

hockey player plays after hearing the demise of her father

முன்னதாக முதலில் நடந்த லீக் போட்டியில் உருகுவே 4க்கு 1 என்கிற கணக்கிலும், போலாந்தை 5க்கு 0 என்கிற கணிக்கிலும் பிஜி அணியை 11க்கு 0 என்கிற கணக்கிலும் இந்திய ஹாக்கி அணி வீழ்த்தி, அதன் பின்னரும் அரையிறுதிப் போட்டியில் சிலி அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில், ஹிரோஷிமா நகரில் நடந்த  உலகக் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக 3வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, அந்த அணிக்காக கேப்டன் ரானி ராம்பால் தொடரை முன்னிலை பெறச் செய்தார். அதன் பின்னர் ஜப்பான் வீராங்கனை 11வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து சமன் செய்தார். கடைசியாக இந்தியாவின் குர்ஜித் கவுர், 2 கோல் அடித்து இந்தியா 3க்கு 1 என்கிற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

இதில் உருக்கமான சம்பவம் என்னவென்றால், இந்திய ஹாக்கி வீராங்கனை லால் ரெம்சியாமி விளையாடச் சென்ற தருணத்தில், தன் தந்தை உயிரிழந்த போதும் விளையாடி அணியை ஜெயிக்க வைத்ததில் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மேலும், இந்த செய்தி தன்னிடத்தில் வந்ததும், தான் அங்கேயே இருந்து விளையாண்டு, இந்திய அணியை தகுதி பெறச் செய்ய வேண்டும் என்றும், அதனால், தன் தந்தையை பெருமைப்பட வைக்க விரும்புவதாகவும் தனது பயிற்சியாளரிடம் லால் ரெம்சியாமி கூறியுள்ளார்.

இந்த தகவலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரின் ரெஜிஜூ, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : #HOCKEY #INDIA