'ஏசி இல்லாம இருக்க முடியாது தான்'... 'ஆனா கொரோனாவ கண்ட்ரோல் பண்றது'... உங்க ரிமோட்லையும் இருக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 30, 2020 11:06 AM

கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள குளிர்சாதனங்களை (ஏ.சி.) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது. 

Govt shares expert guidelines on AC use, during coronavirus outbreak

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநில அரசுகளும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு தற்போது அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக பலரும் வீடுகளில் குளிர்சாதனங்களை (ஏ.சி) பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறு பயன்படுத்தும் போது ஏ.சி. எந்திரங்களை 24 முதல் 30 டிகிரி என்ற அளவில் (இது இயல்பான குளிர்நிலையை மட்டும் தரும்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.