184 நாடுகளில் 'நரக' வேதனை... 12 முறை 'எச்சரித்தும்' கேட்கவில்லை... வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 29, 2020 08:01 PM

கொரோனா வைரஸ் பரவல் குறித்து 12 முறை அதிபர் ட்ரம்புக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

US Trump Ignored 12 Warnings Issued By CIA About Coronavirus

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு 12 முறை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ  எச்சரித்ததாகவும், அமெரிக்காவில் வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த எச்சரிக்கைகளை அதிபர் ட்ரம்ப் முழுமையாக நிராகரித்துவிட்டதால்தான் இப்போது கொரோனாவால் மோசமான பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு பற்றிய விரிவான கட்டுரைகள் காட்டப்பட்டபோதும் அதை ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் இருந்தார் என அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால்தான் தற்போது 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.