நம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல.. வேற லெவல் கேட்ச் பிடித்து அசத்திய தினேஷ் கார்த்திக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 06, 2019 05:26 PM
மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் மும்பை வீரரை கேட்ச் பிடித்து அவுட் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் கடைசி போட்டி நேற்று(05.05.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் இந்தமுறை 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை குறைத்தார்.
முக்கியமான போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அனைத்து போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸல் இந்தமுறை மலிங்காவின் ஓவரில் முதல் பந்திலேயே அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 16.1 ஓவர்களின் முடிவில் 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டி காக் 30 ரன்களும், ரோஹித் ஷர்மா 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் பவுண்ட்ரி லைன் வரை சென்று கேட்ச் பிடித்து மும்பை வீரர் டி காக்கின் விக்கெட் எடுத்தார். ஆனாலும் இப்போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா இழந்துள்ளது.
Dinesh Karthik's spectacular running catch https://t.co/Rg2Kfhn3So via @ipl
— gujjubhai (@gujjubhai17) May 5, 2019
