‘இந்த டைம் தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ்நாட்லயே நீட் எக்ஸாம்’.. ஹால் டிக்கெட் பிழைதிருத்தும் கடைசி தேதி இதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 30, 2019 01:12 PM

நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாகவே பல விதமான எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் நடுவே உறுதி செய்யப்பட்டு, இறுதியாக வெளிமாநிலங்களில் தமிழ் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. முன்னதாக நீட் தேர்வுமுறையை எதிர்த்து போராடிய அரியலூர் அனிதாவின் தற்கொலை நீட் விவகாரத்தை விவாத அரங்கங்களுக்குள் அனுமதித்தது.

Tamil Students Can Write NEET exams in TN exam centres itself

எனினும் காலப்போக்கில் அதன் சுவடுகள் மறைந்து, நீட் தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு உள்ளேயாவது, அதாவது அவரவர் இருக்குமிடத்தில் இருந்து, அருகாமை மையங்களில் தேர்வெழுதவாவது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில்தான் தற்போது தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.   தவிர ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3-ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக முதுகலை மாணவர்களுக்கான நீட் தேர்வில் இந்தியாவிலேயே அதிகம் பேர் தேர்வு எழுதியவர்களும், தேர்ச்சி அடைந்தவர்களும் தமிழத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #NEET #EXAM