“ஒரு கட்டைய கூட தொடக்கூடாது!”.. மோசமானவர்களிடம் இருந்து தேவாலயத்தை மீட்டு போராட்டம் செய்றவங்க யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 21, 2020 08:00 PM

ஜெர்மனியில் தேவாலயங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலால் ஒரு கட்டையை கூட தொடக்கூடாது என்று கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகவாதிகள் முதலில் எதிர்த்து நின்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Germany Atheists Comes together to Save Harz Church viral

ஜெர்மனியின் Harz என்கிற இடத்தில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் ஒன்று. இந்த தேவாலயத்திற்கு ஒரு ஆபத்து வந்ததை அடுத்து அதை நாசம் செய்து அழிக்கவும் ஒரு கூட்டம் முயற்சித்தது. அப்போது கிராம மக்கள் தேவாலயத்தை காப்பாற்ற முன்வந்தனர். அப்படி முன் வந்தவர்கள் அந்த தேவாலயத்தை ஆராதிப்பவர்களா? என்று கேட்டபோது அவர்கள் அந்த தேவாலயத்தின் உறுப்பினர்கள் கூட அல்ல, சொல்லப்போனால் அவர்களில் Hans Powalla என்பவர், தான் ஒரு நாத்திகர் என்று கூறியிருக்கிறார்.

Germany Atheists Comes together to Save Harz Church viral

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தேவாலயத்தின் பின்னணி என்னவென்றால், நுரையீரல் பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டபோது, அந்த பகுதியில் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மக்களுக்காக தான் இந்த தேவாலயம் 1905-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை மூடப்பட்டபோது தேவாலயமும் தனித்து விடப்பட்டது. இதற்கு பிறகு இந்த தேவாலயத்தை பலரும் வம்பு செய்து பொழுது போக்குவதற்கான கேளிக்கை இடமாக மாற்றி விட்டனர்.

Germany Atheists Comes together to Save Harz Church viral

இந்நிலையில் 2013ஆம் ஆண்டு இந்த தேவாலயம் இருந்த இடம் தீப்பற்றி எரிவதைக் கண்டு மக்கள் பதறிப் போய் உள்ளனர். எனினும் தேவாலயத்துக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அருகில் இருந்த கட்டிடம் மட்டும் பாதிக்கப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு பிரச்சனைகள் இனி ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்த மக்கள் அங்கிருந்து தேவாலயத்தை நகர்த்திச் சென்று ஊருக்குள் கொண்டு வர முடிவு செய்தனர். இதற்கு முதற்கட்டமாக பல அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. பணமும் நிறைய தேவைப்பட்டது. ஒருவழியாக மாகாண அதிகாரிகள், மேயர் என பலரும் முதலில் கேலி செய்து பின்னர் தேவாலயத்தை சீரமைக்கும் பணியைச் செய்ய ஒப்புக்கொண்டனர்.

பிள்ளைகள் Building Blocks விளையாடுவது போல தேவாலயத்தை பலகை பலகையாக பிரித்து ஊருக்குள் வாங்கப்பட்டு இருக்கிற புதிய இடத்திற்கு தேவாலயத்தை கொண்டு வந்து மீண்டும் ஒருங்கிணைத்து கட்ட முயன்று வருகிறார்கள் இவ்வூர் மக்கள். இதை முன்னின்று நடத்துபவர்கள் நாத்திகர்கள் எனப்படுகிற கடவுள் நம்பிக்கையற்ற மக்கள் என்பது தான் இதில் இருக்கும் அந்த ஆச்சரியமான உண்மை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Germany Atheists Comes together to Save Harz Church viral | India News.