VIDEO: லாக்டவுனால் மூடப்பட்ட 'பாலியல் தொழில்'!.. தெருவுக்கே 'ரெட் லைட்' போட்டு அதிரவைத்த கண்டன போராட்டம்!.. சமூக இடைவெளிக்கு இவங்க சொல்ற 'ஐடியா' என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்ப்ராத்தல் தொழில் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது, அங்கு தொற்று குறைந்துவருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு சில நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மற்ற தொழில்கள் இயங்க அனுமதி அளித்ததுபோலவே, ப்ராத்தல் தொழிலும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் தெருவுக்கு வந்து சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், கொரோனா தொற்று ஏற்படாதவகையில் பாலியல் தொழில் நடத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர். கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல், வாடிக்கையாளர்களின் முகவரியை சேகரித்தல் போன்ற அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதாக உறுதியளித்தனர்.
சுத்தமும், சுகாதாரமும் பாலியல் தொழிலின் அங்கம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் போராட்டம், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.