'என்னோட காது நல்லாவே இல்ல'!.. ஆப்ரேஷன் பண்ணி... ஆளு இப்படி மாறிட்டார்!.. எல்லாமே 'இது'க்காக தான்!.. இளைஞர் கொடுத்த ஷாக்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 27, 2020 04:16 PM

உடலில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, ஒருவர் தன்னுடைய காதுகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, அவற்றை ஜாடியில் போட்டு பாதுகாத்து வருகிறார்.

germany man spends rs 58 lakh 17 body modifications gets ears removed

ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயதுடைய சான்ட்ரோ, fashionக்காக தன்னுடைய உடலில் மாற்றங்களை ஏற்படுத்தில் ஆர்வம் கொண்டவர். இவர் சமூக வலைதளங்களில் Mr.Skull Face என்று அறியப்படுகிறார். கடந்த 2019 ஆண்டு முதல், நெற்றி, கை, நாக்கு முதலிய உடல் பகுதிகளில் பல சிகிச்சைகளை மேற்கொண்டு மாற்றங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

                 germany man spends rs 58 lakh 17 body modifications gets ears removed

இந்நிலையில், தற்போது அவரது 2 காதுகளையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, அவற்றை ஜாடியில் வைத்து பாதுகாத்து வருகிறார். சுமார் 58 லட்சம் ரூபாய் செலவு செய்து, டாட்டூ வரைவது, பாகங்களை மாற்றி அமைப்பது, அகற்றுவது போன்றவற்றினால், தனது உடலில் 17 மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "இந்த மாற்றங்கள் என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன. இப்படியொரு தோற்றம் என்னை ஊக்கப்படுத்துகிறது. இதற்காக, எனது வேலை கூட பறிபோனது. ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என் மனத்திருப்தி தான் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

germany man spends rs 58 lakh 17 body modifications gets ears removed

மேலும், தன்னை விமர்சனம் செய்பவர்களால், தான் முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Germany man spends rs 58 lakh 17 body modifications gets ears removed | World News.