“ஹலோ.. நீங்க வாங்கியிருக்குறதே ஐரோப்பிய தடுப்பூசிதான்.. ஓவர் கொண்டாட்டமா இருக்கே?”.. கடுப்பான ஜெர்மன் அமைச்சர் காட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்முதன் முதலில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன். இதனைத் தொடர்ந்து, பிரெக்சிட் காரணமாகத்தான் தங்களுக்கு அது கிடைத்ததாக பிரிட்டன் சுகாதாரச் செயலரான Matt Hancock தெரிவித்திருந்தார்.

இதனால் கடுப்பான ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, “நீங்கள் வாங்கியிருப்பதே ஜெர்மன் தயாரிப்பான ஒரு தடுப்பூசி, அதாவது ஐரோப்பிய தடுப்பூசிதான்: என்று பிரிட்டனை சாடியுள்ளார். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டானியா வாங்கியிருக்கும் தடுப்பூசியே ஒரு ஐரோப்பிய தயாரிப்புதான் என்பதை தான் இப்படி சொல்லியிருக்கிறார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn.
ஆனால் இந்த தடுப்பூசி மிக நல்ல தயாரிப்பு, என்பதால்தான் பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு ஜெர்மன் நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியதில் தனக்கு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளும் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் எனும் நிலையில், முதலில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதால் பிரிட்டன் நடத்தும் வெற்றிக் களிப்பினைக் கண்டு எரிச்சலடையும் நபர் தான் ஒருவர் மட்டும் அல்ல என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
